மதவெறி அரசியலுக்கு எதிராக ஒன்றுதிரண்ட தமிழ்நாடு
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை
விசிக-கம்யூனிஸ்ட் கட்சிகளின் அறைகூவலுக்கு தமிழ் நாட்டில் முதன் முதலாக பதிலளித்த முதல் அமைப்பு மே பதினேழு இயக்கம் ஆகும். இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் இந்த மனித சங்கிலி நிகழ்விற்கு ஆதரவளித்து தம்மை இணைத்துக் கொண்டன.
அக்டோபர் 11 அன்று மாலை 4 மணி அளவில் தமிழ் நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி ஒருங்கிணைக்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள்-கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதிமுக, இ.யூ.முஸ்லீம் லீக், மமக, தவாக உள்ளிட்ட 33-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் மே 17 இயக்கம், திராவிடர் கழகம் உள்ளிட்ட 44 இயக்கங்களும் என 80-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழ் நாடு முழுவதும் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் பங்கேற்றனர்.
பத்திரிக்கையாளர்களிடையே பேசிய தோழர் திருமுருகன் காந்தி, “தமிழ்நாட்டில் மதவெறி அரசியலுக்கு இடமில்லை என்பதை இந்தப் பேரணி எடுத்துரைக்கின்றது. பிரிவினைவாதத்தை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற இந்துத்துவ அமைப்புகளின் அரசியலை எதிர்த்து வெற்றிகரமாக இந்த மனித சங்கிலிப் பேரணி நடந்து கொண்டிருக்கிறது. சாதி மத எல்லை கடந்து மக்கள் வீதிக்கு வந்து இந்துத்துவ அரசியலுக்கு எதிராக கரம் கோர்த்து நிற்கின்றார்கள். இதுதான் இந்த மண்ணின் அரசியல். இதுதான் பெரியாரின் அரசியல். மார்க்சின் அரசியல். அண்ணல் அம்பேத்கரின் அரசியல். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மத வெறியை மாய்ப்போம்.” என்று கூறினார்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010