மேற்காசிய குவாட் I2U2: இந்தியாவை ஆட்டுவிக்கும் அமெரிக்கா – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை
மேற்கு ஆசியக் கடற்பகுதியில் சீனாவை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆபிரகாம் உடன்படிக்கைகள் போன்று இஸ்ரேல், இந்தியா, USA, UAE ஆகிய நாடுகளை கொண்டு அமெரிக்கா முன்னகர்த்திய அமைப்புதான் I2U2.
இந்தோ-பசிபிக் பகுதிக்கு குவாட் இருப்பது போல, மேற்கு ஆசிய பகுதிக்கு I2U2 “ஒரு முக்கிய விடயமாக” மாற முடியும் என்று அமெரிக்கா அண்மையில் கூறியது. குவாட் அமைப்பில் ஆஸ்திரேலியாவை முன்னிலைப்படுத்தி தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொண்டது போல, இஸ்ரேலை முன்னிலைப்படுத்தி, இந்தியாவை பயன்படுத்தி அமெரிக்கா தனது விருப்பங்களை நிறைவேற்றக்கொள்ள முயற்சிக்கிறது. அமெரிக்காவின் விருப்பங்கள் முதன்மையாக்கப்படும் நிலையில், குவாட் போலவே I2U2-வில் இந்தியாவின் முக்கியத்துவம் கேள்விக்குறியாகவே உள்ளது.
I2U2 மூலம் இந்தியா அடையப்போகும் நன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. சீனாவிற்கு எதிரான ஒரு பகடைக் காயாக இந்தியாவை பயன்படுத்தும் நோக்கமே அமெரிக்காவிற்கு உண்டு. குவாட் துவங்கப்பட்ட போது இந்தியாவிற்கு இருந்த முக்கியத்துவம் நாளடைவில் குறைந்தது. இந்த நிலையில், I2U2-வில் இந்தியாவின் முக்கியத்துவம் எந்தவிதத்திலும் மேம்பட்டிருக்காது என்றே தெரிகிறது.
மேலும் வாசிக்க