மாநில சுயாட்சி தத்துவத்தை செதுக்கிய அண்ணா – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

மாநில சுயாட்சி தத்துவத்தை செதுக்கிய அண்ணா
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

இந்திய ஒன்றிய அரசின் நிதிப் பங்கீட்டுக் கொள்கை என்பது கொள்ளையின் மறுவடிவமாக உள்ளதை கோடிட்டுக் காட்டியவர் அறிஞர் அண்ணா. “திட்டங்கள் டில்லியிலே தீட்டப்படுவது நிறுத்தப்பட்டு, மாநிலங்களில் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். டில்லி சர்க்கார் ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் தொடர்பு ஏற்படுத்துகின்ற வகையில் இயங்க வேண்டுமே தவிர, திட்டங்களைப் போடுவதற்கும் நிதியைப் பங்கிட்டுக் கொடுப்பதற்கும் அதிகாரங்கள் இருக்கக்கூடாது.” என்றார் அண்ணா.

அண்ணா வேதனையுடன் கூறிய “வடக்கு வாழ்கிறது- தெற்கு தேய்கிறது” என்னும் நிலையிலிருந்து இன்று “தெற்கு வளர்கிறது – வடக்கு சுரண்டுகிறது” என்று சொல்லும்படியாக அண்ணா வித்திட்ட அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் போக்கினால் வளர்ந்திருக்கிறது தமிழ் நாடு.

“மாநில சுயாட்சி தரத் தயக்கம் காட்டுவார்களானால் அளவுக்கு மீறிய அதிகாரங்களைத் தாங்கித் தாங்கி, பாதுகாப்பு போன்ற பெரிய விஷயங்களில் சோடை போய்விடுவார்களோ என்பது தான் எங்கள் சந்தேகம்..” என்று சொன்ன அண்ணாவின் சந்தேகப்படியே இந்தியா பாதுகாப்பு விடயத்தில் சோடை போனது.

“சங்க காலத்தில் கடலை ஆண்ட தமிழன், கிரேக்கம் வரை சென்று வணிகம் செய்த தமிழன், சுதந்திர காலக்கட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழனிடம் இப்போது எந்த கடல் சார் நிறுவனங்களும் இல்லை. கட்டற்ற முதலீடு வடக்கில் உள்ள முதலாளிகளிடம் இருக்கிறது. அதனால் அவர்களால் வங்கி தொடங்க முடிகிறது, காப்பீடு நிறுவனங்கள் தொடங்க முடிகிறது, பெரும் பெரும் ஆலைகள் எல்லாம் தொடங்க முடிகிறது. ஆனால், காலம் காலமாக தொழிலில் சிறந்து விளங்கிய தமிழ் சமூகம் மற்றும் அந்த சமூகத்தின் நிலப்பரப்பு வெறும் சந்தையாக மட்டும் சுருங்கிவிட்டது… வளங்களை சுரண்ட, பொருட்களை விற்க மட்டும்தான் இந்த திராவிட நிலப்பரப்பு அவர்களுக்குத் தேவை. நம்மை கொண்டு பணத்தை விளைவித்து பத்து மடங்காக அறுவடை செய்கிறார்கள். தேசப் பற்றின் பெயரால் உணர்வுகளை தூண்டி, நம்மை சுரண்டி அவர்கள் கொழுக்கிறார்கள்.” என தனது பணத்தோட்டம் புத்தகத்தில், கடல் கடந்து வணிகம் செய்த தங்களினத்தின் சிறப்புகளை மறந்து போன தமிழர்களின் நெஞ்சம் உறைக்கும் வண்ணம் எடுத்துரைக்கிறார்.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply