










திருக்குறளை அவமதித்து, தொடர்ந்து மாநில உரிமைகளுக்கு எதிராக செயலாற்றி வரும் தமிழ் நாட்டின் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை கண்டித்து, தமிழர் தேசிய முன்னணி சார்பாக ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் செப்டம்பர் 11 ஞாயிறு காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். தலைவர்கள், தோழர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டனர்.