“மனித” மிருகக்காட்சி சாலைகள்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை
15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த பிரபுக்களுக்குக் கேளிக்கை காண்பிக்க ஆப்ரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் விலங்குகள் போல் வேட்டையாடப்பட்டு விற்கப்பட்டனர். அவர்களை அடிமைகளாக விலைக்கு வாங்கி வந்து அவர்களுடைய சடங்குகளை நடத்திக் காண்பித்தனர். இது 19-ஆம் நூற்றாண்டில் மக்களிடையே பிரசித்தி பெற்ற பொழுதுபோக்காகவும் பணம் கொழிக்கும் தொழிலாகவும் மாறியது.
“நாங்கள் நாகரிகம் அடைந்த விட்டோம்!” என்று கூறிய ஐரோப்பியச் சமூகம் மிருகங்களை அடைத்து வைப்பதைப் போல மனிதர்களை அடைத்து மனித காட்சி சாலைகளை உருவாக்கினார்கள். கண்காட்சி, திரையரங்கம், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பூர்வ குடிகள் நிலப்பரப்பில் வாழும் கிராமங்களைப் போல் உருவாக்கி அதில் அடைத்து வைத்து பணம் சம்பாதித்தனர்.
தோற்றத்தில் தங்களைக் காட்டிலும் மாறுபட்ட மனிதர்களைக் காண்பதிலும் ஆர்வம் காட்டியதன் விளைவாக மிருகக்காட்சி சாலைகளில் அவர்களை அடைத்து காட்சிப்பொருளாக்கினர். இது வெறும் வியாபார நோக்கோடு மட்டுமல்லாமல், வெள்ளையர்களின் தோல் நிற மேன்மையை உலகுக்குக் காட்டவே நடைமுறைப்படுத்தபட்டது.
கட்டுரையை வாசிக்க