அம்பலமான காவி பயங்கரவாதம்
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை
1999-ஆம் ஆண்டில், ஆர்எஸ்எஸ்-இன் மூத்த நிர்வாகியான இந்திரேசு குமாரின் அறிவுறுத்தலின் பேரில், யசுவந்த் சிண்டே, இமான்சு பான்சேவையும் அவரது ஏழு நண்பர்களையும் ஜம்முவிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர்கள் இந்திய ராணுவ வீரர்களிடம் நவீன ஆயுத பயிற்சி பெற்றனர் என்றும் வாக்குமூலத்தில் சிண்டே பதிவு செய்கிறார்.
மாலேகான் மசூதி, சம்ஜவ்தா அதிவிரைவு ரயில், ஐதராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் தர்கா போன்ற தொடர் குண்டுவெடிப்புகளில் சாமியார் அசீமானந்தா, பிரக்யா தாகூர், இராணுவ முன்னாள் அதிகாரி புரோகித் உட்பட பல இந்துத்துவ நபர்களின் தொடர்புகளை ஆதாரத்துடன் தீவிரவாதத் தடுப்புக் படையின் (ATS) தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே ஒரு சில நாட்களில் கொண்டு வருவதாகக் கூறினார். ஆனால் அதற்குள் நவம்பர் 26, 2008 அன்று மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்
பாஜக ஆட்சியைக் கொண்டு வருவதற்காக ஆர்எஸ்எஸ் வன்முறைக் கும்பல் குண்டு வெடிப்புகளின் ஊடாக உதவி செய்திருக்கிறது. அதற்கு இஸ்லாமியர்களை பலியாக்கியதோடு, மொத்தப் பழியையும் அவர்கள் மீதே போட்டு அப்பாவி இந்துக்களின் மனதில் நஞ்சினை விதைத்திருக்கிறார்கள். இவர்களின் கொடூரங்களை அஞ்சாது வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்எஸ்எஸ்-சின் முன்னாள் உறுப்பினரான சிண்டே.
மேலும் வாசிக்க