நிதியை இழந்த தென்னிந்தியா நாடாளுமன்ற தொகுதிகளையும் இழக்கிறது!
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்
இந்தியாவின் மக்கள் தொகையில் தென்னிந்திய மக்கள் தொகை என்பது 1951-ல் 26.2 சதமாக இருந்தது. இது 2022-ல் 19.8 சதமாக குறைந்திருக்கிறது. இதற்கு அடிப்படை காரணியாக இருப்பது 1970-களில் கொண்டுவரப்பட்ட மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்தை தென்னிந்திய மாநிலங்கள் முறையாக கடைப்பிடித்ததே ஆகும். அதே சமயம் மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத இந்தி பேசும் மாநிலங்களின் மக்கள் தொகை இந்திய அளவில் 39% அளவிலிருந்து தற்போது 43% அதிகரித்திருக்கிறது. இதே நிலை தொடருமெனில் அடுத்த 20 ஆண்டுகளில் தென்னிந்தியாவின் மக்கள்தொகை இந்திய அளவில் வெறும் 12-15 சதமாக குறைந்து போகும். அதாவது இந்தியாவில் சிறுபான்மை சமூகமாக மாற்றப்படுவார்கள்.
இப்படியான கணக்கீட்டை மோடி அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அளவீடை கைகழுவி 2011 ஆண்டு மற்றும் அதற்கு பின்பான மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்கிறது.
இப்படியாக இந்திய நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் நான்கில் ஒருவீதம் அல்லது கிட்டதட்ட 25 சதம் குறைக்கப்படுமானால் தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரம் கேள்விகுறியாகும். ஆனால் அதே சமயம் இந்தியாவின் நாடாளுமன்ற தொகுதிகள் மக்கள்தொகை அதிகரிப்பின் காரணமாக அதிகரிக்கும். அப்படியான அதிகரிப்பில் வட மாநிலங்கள் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்கள் பெருத்த லாபமடையும். இந்தியாவின் ஆகப்பெரும்பான்மையை இந்தி பேசும் மாநிலங்கள் பெற்றுவிடும்.
வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010