மாணவி ஸ்ரீமதியின் பிணக்கூறாய்வுகளுக்கு இடையேயான முரண்பாடு
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்
இரண்டாவது அறிக்கையின் படி மாணவியின் உடலில் பல்வேறு காயங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் அறிக்கையில் இல்லாத காயங்கள் பற்றிய குறிப்புகள் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கின்றன. எலும்பு முறிவு ஏற்பட்ட தடயங்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவரங்கள் போராடிய பொதுமக்களின் கேள்வியை நியாயப்படுத்துவது போலவே அமைந்திருக்கிறது. முதலில் நடந்த பிணக்கூறாய்வில் பதிவு செய்யப்படாத தடயங்களை இரண்டாவது ஆய்வு வெளிப்படுத்துவதால் காவல்துறையின், மருத்துவத்துறையின் நேர்மை கேள்விக்குள்ளாகிறது. ஒரு இளம்மாணவிக்கு நிகழ்ந்த இந்த கொடூர மரணத்தை குறித்து ஏன் அதிகாரவர்க்கம் நேர்மையாக நடக்க மறுக்கிறது எனும் கேள்விக்கான பதில் என்னவாக இருக்க முடியும்?
வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010