



























ஃபோர்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வலியுறுத்தி, மே பதினேழு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டம், 24-06-2022 வெள்ளிக்கிழமை மாலையில் சென்னை எழும்பூர் இராஜத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்றது.
போராடும் ஃபோர்டு தொழிலாளர்களின் பிரதிநிதிகள் 10-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம், கோரிக்கைகளை வலியுறுத்திய முழக்கங்களுடன் தொடங்கியது. ஃபோர்டு தொழிலாளர்களின் சார்பாக தோழர் மணிகண்டன் மற்றும் தோழர் ஜெயச்சந்திரன் உரையாற்றினர். தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பின் தோழர் லயோலா மணி, தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தின் தோழர் ம.சேகர், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் தோழர் ஏஎஸ் கண்ணன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் ஆகியோர் உரையாற்றினர்.
இடையே, தங்கள் போராட்டத்தின் அடையாளமாக உண்ணாநோன்பு மேற்கொண்டிருந்த ஃபோர்டு தொழிலாளர்களின் நோன்பு ஆர்ப்பாட்ட மேடையில் பழரசம் கொடுத்து முடித்துவைக்கப்பட்டது. இறுதியாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010