சென்னை ஃபோர்டு நிறுவனத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிடக் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

போராடும் சென்னை ஃபோர்டு நிறுவனத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிடக் வலியுறுத்தி, மே பதினேழு இயக்கம் நடத்திடும் ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசே!
தமிழகத்தில் நமது தண்ணீர், மின்சாரம், நிலம் ஆகியவற்றை மானியமாக பெற்றுக்கொண்டு இயங்கும் பன்னாட்டு, பெருநிறுவன தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் ஆகியவற்றை உறுதிபடுத்தும் வகையில் கொள்கை முடிவுகளை அறிவித்திடுக!

* ஃபோர்டு நிர்வாகமே! நிரந்தர தொழிலாளர்களின் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கைகளை ஏற்று தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடங்கிடு!

* தமிழக அரசே! ஃபோர்டு நிர்வாகம் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் நடத்திடும் பேச்சுவார்த்தையில் தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றிடு!

* ஃபோர்டு ஆலை மூடுவதால் MSME, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் ஏற்படப்போகும் வேலையிழப்புகளில் உடனடியாக தலையிட்டு பணியாளர்களை பாதுகாத்திடு!

* தமிழகத்தில் நமது தண்ணீர், மின்சாரம், நிலம் ஆகியவற்றை மானியமாக பெற்றுக்கொண்டு இயங்கும் பன்னாட்டு பெரு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு, நிரந்தரப்பணி ஆகியவற்றை உறுதிபடுத்தும் வகையில் கொள்கை முடிவுகளை அறிவித்திடுக!

* ஃபோர்டு ஆலையை சுற்றியுள்ள சிறு கடைகள் மற்றும் சுயதொழில் செய்யும் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடு!

தொழிலாளர் நலன் காக்க அனைவரும் ஒன்றுகூடுவோம்!

இடம்: இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், எழும்பூர், சென்னை
நாள்: 24-06-2022 வெள்ளி மாலை 4 மணிக்கு

அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply