கோவை மறந்த விடுதலைப் போர் – வரலாறு மீட்பு மாநாடு
வரலாற்றுச் சிறப்புமிக்க கோவை விடுதலைப் போரை மீட்டெடுக்க மே பதினேழு இயக்கம் சார்பாக ‘வரலாறு மீட்பு மாநாடு’ ஜூன் 12, 2022 ஞாயிறு மாலை கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் நடைபெற்றது. நிகழ்வு துவங்கும் முன்னர் நிகர் கலைக்குழுவினரின் பறையாட்டம் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட நிகழ்வில், மே 17 இயக்கத்தின் தோழர் கொண்டல்சாமி வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் துவக்க உரையாற்றினார்.
தொடர்ந்து தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன், திராவிடத் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் தோழர் பேரறிவாளன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் பொழிலன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
அதனையடுத்து, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பி.ஆர்.நடராஜன், ஆதித்தமிழர் கட்சியின் தோழர் ஜக்கையன், தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவையின் தோழர் கிருட்டிணமூர்த்தி, தமிழ் சிறுத்தைகள் கட்சியின் தோழர் அகத்தியன், தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முகிலன், தோழர் செல்வராமலிங்கம் ஆகியோர் இணைந்து, மாநாட்டு அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஈகியர் சுடர் தூணில், கோவைப் போரில் கொல்லப்பட்ட 42 போராளி ஈகியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஈகியர் சுடர் ஏற்றினர். அப்போது போராளிகளின் ஈகத்தை போற்றும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத்தலைவர் தோழர் முகம்மது முனீர், திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாநகரத் தலைவர் தோழர் நேரு தாஸ், மனிதநேய சனநாயக கட்சியின் தலைவர் தோழர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தோழர் உ.தனியரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கோவைப் போர் எழுச்சியை நினைவுகூரும் வகையில், மாநாடு அரங்கில் வைக்கப்பட்டிருந்த, மே பதினேழு இயக்கத்தின் ஓவியர்.புருசோத்தமன் அவர்கள் உருவாக்கிய மாதிரி நினைவுச் சின்னத்தை, மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஐயா வைகோ அவர்கள் திறந்து வைத்து மக்களிடையே அறிமுகப்படுத்தினார்.
அதன் பின்பு எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் நெல்லை முபாரக் அவர்கள் சிறப்புரையாற்றினார். இதனையடுத்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மாநாட்டின் விளக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து ஐயா வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, தமிழக மக்கள் ஜனநாயக ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர் கே.எம்.சரீப், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக தலைமை நிலையச் செயலாளர் ஐயா சி.சண்முகவேலு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில முதன்மை துணைத் தலைவர் திரு அப்துல் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இடையே, மாநாட்டில் முன்னிலை வகித்துக்கொண்டிருந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தோழர் முகம்மது ஷபீர் அவர்களுக்கு தோழர் நாகை திருவள்ளுவன் அவர்களும், எஸ்டிபிஐ கட்சியின் தோழர் அ.முஸ்தபா அவர்களுக்கு தோழர் கு.இராமகிருட்டிணன் அவர்களும், சனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர் கே.கனகராஜ் அவர்களுக்கு தோழர் பொழிலன் அவர்களும், மனிதநேய சனநாயக கட்சியின் தோழர் எம்.எச்.அப்பாஸ் அவர்களுக்கு தோழர் நெல்லை முபாரக் அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெ.ந.உதயகுமார் அவர்களுக்கு ஐயா வைகோ அவர்களும், மதிமுகவின் தோழர் ஆர்.ஆர்.மோகன் அவர்களுக்கு தோழர் முத்தரசன் அவர்களும் மரியாதை செய்தனர். மேலும், மனிதநேய மக்கள் கட்சியின் தோழர் சர்புதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர் பி.முகம்மது பஷீர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் இலக்கியன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தோழர் ஸ்டான்லி ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டது.
மேலும், எளிய மக்களுக்காக, சாதி, மதம் கடந்து சமூக ஒற்றுமைக்காக பங்களிக்கக் கூடிய கோவை மாநகர ஆளுமைகள் சிலரை சிறப்புக்குரியவர்கள் என்ற வகையில், மூத்த இதழியலாளர் தோழர் பா.மீனாட்சி சுந்தரம், பியுசிஎல் மூத்த வழக்கறிஞர் தோழர் அபுபக்கர், மறைந்த கவிஞர் எழுத்தாளர் தோழர் இரா.செந்தில்குமார் ஆகியோருக்கு ஐயா வைகோ அவர்களும், எழுத்தாளர் தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களுக்கு தோழர் முத்தரசன் அவர்களும், சமூகவலைத்தள ஊடகம் நக்கலைட்ஸ் குழுவினருக்கு தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களும், தமுஎகச எழுத்தாளர் தோழர் கரீம் அவர்களுக்கு ஐயா சி.சண்முகவேலு அவர்களும் சிறப்பு செய்தனர். மேலும், பெட்டகம் நூலாசிரியர் தோழர் அமீர் அல்தாப், தெளிவுபாதையின் நீசதூரம் படத்தின் இயக்குநர் தோழர் அரவிந்த் அவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்த தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முகிலன், ஆதித்தமிழர் கட்சியின் தோழர் ஜக்கையன், தோழர் செல்வராமலிங்கம், தமிழ் சிறுத்தைகள் கட்சியின் தோழர் அகத்தியன், ஆதித்தமிழர் பேரவையின் தோழர் இரவிக்குமார், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோருக்கு மாநாட்டு மேடையில் சிறப்பு செய்யப்பட்டது.
மே பதினேழு இயக்கம்
9884864010