

















மதுரையில், தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகிலுள்ள இராமசுப்பு அரங்கத்தில், மே 20, 2022 வெள்ளிக்கிழமை மாலை மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. மேலும், மறைந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மதுரை மாவட்ட பொறுப்பாளர் தோழர் கிட்டு ராசா அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் பிரவீன் குமார் மற்றும் தோழர் புருசோத்தமன் ஆகியோர் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார். மேலும் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பேரறிவாளன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010