

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மதுரை மாவட்ட பொறுப்பாளரும், பெரியாரியவாதியும், தமிழீழ உணர்வாளருமான தோழர் கிட்டு ராசா உடல்நல குறைவு காரணமாக 24-04-2022 அன்று மரணமடைந்தார். சிறந்த களப்போராளியான தோழர் கிட்டு ராசா தமிழ்த்தேசிய, தமிழர் வாழ்வுரிமை, ஆரிய சனாதன எதிர்ப்புக்கான அனைத்து போராட்டங்களில் முன்னணியில் நின்று பொறுப்புணர்வோடு அச்சமின்றி களப்பணியாற்றியவர். மதுரையில் நடைபெறும் மே பதினேழு இயக்கத்தின் அனைத்து போராட்டங்களிலும் தவறாது பங்கேற்பவர். தோழர் கிட்டு ராசாவின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு. அவரது பிரிவில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் கிட்டு ராசாவிற்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்.
மே பதினேழு இயக்கம்
9884864010