நீலந்தாங்கல் சாதிய தாக்குதல்: கள ஆய்வறிக்கை
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
மணியின் சாதியை குறிப்பிட்டு அவமானமாக பேசி அவர் வழக்கமாக கையெழுத்து போட பயன்படுத்தும் பேனவைக்கூட பிடுங்கி கொண்டு சுகுமார் அவமானப்படுத்தி விட்டு சென்றார். அதனால் மணி மனம் குறுகி வீட்டோடு இருந்து விட்டார். பொங்கல் முடிந்த பின்னர் துணைத் தலைவர் சுரேஷ் உதவியுடன் நடந்த விசயங்களை மனுவாக்கி மாவட்ட ஆட்சியரிடம் மணி வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து குறைகளைக் கூற மணி முற்பட்ட போது அவரை மாவட்ட ஆட்சியர் “நீ தப்பு செய்ததால் தான் என் காலில் விழுகிறாய்” என அவரையே குறைசொல்லி பேசி ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010