புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளையொட்டி, மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 14-04-2022 காலை சென்னை கோடம்பாக்கத்திலுள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் பறையிசைத்துக் கொண்டே அணிவகுத்து சென்று முழக்கங்கள் இட்டவாறு மரியாதை செலுத்தினர். விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்.
மே பதினேழு இயக்கம்
9884864010