நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் வெல்லட்டும்! தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறட்டும்!!

நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் வெல்லட்டும்! தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறட்டும்!! – மே பதினேழு இயக்கம்

ஒன்றிய-மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து நாடு முழுவதும் தொழிலாளர்களும் அரசு ஊழியர்களும் தங்கள் உரிமைகளை மீட்க தொடர்ச்சியாக பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதன் பிறகும் தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத ஒன்றிய-மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி, தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற்றிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை நிறுத்திட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்திட வேண்டும், மத்திய-மாநில அரசுப் பணிகளில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் மார்ச் 28, 29 ஆகிய இரு நாட்களில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. தொழிலாளர் நலன் காத்திட வேண்டும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் வென்றிட வேண்டும் என்ற நோக்கில், இந்த நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மே பதினேழு இயக்கம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், மே பதினேழு இயக்கம் இந்த நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply