இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் அடிப்படையே அதன் ராணுவமும், சிங்கள இனவெறியும் தான். தமிழருக்கு எதிராக தயாரிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிங்கள ராணுவத்தினால் சிதைக்கப்பட்ட தமிழ்நிலம், தமிழரின் பொருளாதாரத்தை சிதைந்தது. தமிழீழத்தின் மீது கிட்டதட்ட 25 ஆண்டுகளாக சிங்களம் பொருளாதார தடை விதித்து தமிழர் வாழ்வை அழிக்க முனைந்தது.
கடல் சூழ்ந்த அந்த நிலத்தின் பிறபகுதியை சிங்களப்படை சூழ்ந்து வேட்டையாட முயன்ற போது போராளிகளே இப்பொருளாதார நெருக்கடியை வென்று ஈழத்தினை முன்னேற்றினார்கள்.
சிமெண்ட், பெட்ரோல், டீசல், மருந்துகள், உணவு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்தும் இலங்கையால் தடை செய்யப்பட்டன. இருந்த போதிலும் தங்களது உயிரை பணயம் வைத்தே இவற்றை இறக்குமதி செய்தனர். இந்திய-இலங்கை கடற்படைகளை மீறியே தங்களுக்கான வாழ்வாதார பொருட்களை ஈழத்திற்குள் கொண்டு வந்தனர். இதை வைத்தே ஈழம் தற்சார்பை நோக்கி நகர்ந்தது.
மின்சாரம், மருத்துவம், கல்வி, உணவு, கட்டிடத்தொழில் என விரிந்து அவர்கள் தம் பொருளாதாரத்தை வளர்த்தார்கள். இந்த வளர்ச்சியில் அனைத்து சமூகத்திற்கும் சமமான வாய்ப்பளிக்கப்பட்டது. இந்தியச் சமூகம் போல சில சாதிகள் மட்டுமே வணிக-பொருளாதார உற்பத்திக்குள் ஈடுபடும் ஏற்றத்தாழ்வுகள் அங்கில்லை.
நிலம் கூட்டுபண்ணை முறைக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் நடந்தன. தலித்துகள், பெண்கள் என எவ்வித வேறுபாடு இல்லாமல் அனைவரும் அதிகார-பொருளாதார கட்டமைப்புகளில் சமமாக பங்கெடுத்தனர்.
இலங்கையின் போர், இந்தியாவின் தடை, மேற்குலகின் பயங்கரவாத முத்திரை குத்துதல், அவதூறு பிரச்சாரங்களுக்கு இடையேயும் தமிழர்களை காத்தது மட்டுமல்ல கிழக்கில் வெள்ளம் வந்தபோது சிங்கள மக்களை மீட்டனர். உணவு கொடுத்தனர்.
சுனாமியில் பிறபகுதி மக்கள் வாழிடங்களை சீரமைத்தனர். சுனாமி நேரடியாக தாக்கிய வெகுசில பகுதிகளில் ஈழகடற்கரையும் ஒன்று. சர்வதேச நிவாரணநிதி கிடைக்காமல் அமெரிக்கா தடுத்தது. போரை துவக்கினார்கள். ஐரோப்பாவில் தடை கொண்டு வந்தார்கள். இருந்தபோதிலும், முள்ளிவாய்க்கால் வரை தம் மக்களை காத்து நின்றனர்.
அனைத்து நிதி-ராணுவ-உளவு உதவிகள் கிடைத்த போதிலும், சிங்களம் போர் முடிந்த 10 ஆண்டுகளில் பிச்சைக்கார நாடானது. பார்ப்பனியம் தன் தமிழின வெறுப்பிற்காகவும், பனியா தன் பொருளாதர நலனுக்காகவும், ஏகாதிபத்தியம் பிராந்திய நலனுக்காகவும் சிங்கள இனவெறியை தூண்டி தமிழர்களை பலியிட்டார்கள். தற்போது இலங்கையை வேட்டையாடுகிறார்கள்.
இலங்கையின் இனவெறி ஆளும்வர்க்கம் அரசியலிலிருந்து ஒழிப்பதற்கு இந்த நெருக்கடியை தமிழர்கள்-பிறமுற்போக்கு சக்திகள் பயன்படுத்தாவகையில் இந்திய ஆளும்வர்க்கம் அவர்களை காக்கிறது.
தோழர் திருமுருகன் காந்தி
மே17 இயக்கம்