






சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்ணை இழிவாக நடத்திய தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தியும், அனைத்து பக்தர்களையும் சிற்றம்பல மேடையில் ஏறி வணங்க அனுமதிக்க கோரியும், நடராஜர் கோவிலை இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கக் கோரியும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் சார்பாக 24-02-22 அன்று கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தபெதிக பொதுச் செயலாளர் தோழர் கோவை கு. இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில், திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் துரை சந்திரசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு உள்ளிட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010