













திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு ஊராட்சி பகுதியில் சிப்காட் அமைக்க விளைநிலங்கள் மற்றும் வீடுகளை கையகப்படுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என, பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சார்பாக தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தின் 50வது நாளை முன்னிட்டு, 09-02-22 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முழு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை.
மே பதினேழு இயக்கம்
9884864010