திருவண்ணாமலை மாவட்டம் அருந்ததியர் மக்கள் மீது நடந்த தாக்குல் குறித்த – கள ஆய்வு அறிக்கை – ஆவணப்படம் – வெளியீடு – கருத்தரங்கம்

திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளருமான தோழர் எஸ்எஸ் பாலாஜி அவர்கள் ஆற்றிய உரை.

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தை சேர்ந்த பட்டியலின அருந்ததியர் மக்கள் மீது கடந்த ஜனவரி 16 அன்று சாதிவெறி கூட்டம் தாக்குல் நடத்தியது. இது குறித்து மே பதினேழு இயக்கத்தின் உண்மை கண்டறியும் குழு ஜனவரி 19, 22 ஆகிய நாட்களில் கள ஆய்வு மேற்கொண்டது. அக்கள ஆய்வின் அறிக்கை வெளியீடு, ஆவணப்படம் வெளியீடு, பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி சாட்சியங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 28-01-22 மாலை சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் அரங்க குணசேகரன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை. திருவள்ளுவன், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், திராவிடர் தமிழர் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் சங்கர், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். வீரளூர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் கலந்துகொண்டதோடு சிலர் நேரடி சாட்சியங்கள் அளித்தனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply