






திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் மீது சாதிவெறி கூட்டம் நடத்திய தாக்குதலை கண்டித்து, ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக அதன் தலைவர் தோழர் கு.ஜக்கையன் அவர்கள் தலைமையில் இன்று (28-01-22) காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010