

























மீனவர் உரிமை, வாழ்வாதாரம் குறித்த நூல்கள் வெளியீடு
எழுத்தாளர் குறும்பனை சி. பெர்லின் அவர்கள் மீனவர் உரிமை மற்றும் வாழ்வாதாரம் குறித்து எழுதிய ‘நெய்தல் சொல்லகராதி’ உள்ளிட்ட 8 நூல்களை வெளியிடும் விழா, மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 07-01-2022 வெள்ளிக்கிழமை மாலை, சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்றது.
விசிக தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் நூல்களை வெளியிட, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் அப்துல் சமது அவர்களும், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் பெற்றுகொண்டனர்.
இந்நிகழ்வில், பல்வேறு மீனவ அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றினார். எழுத்தாளர் குறும்பனை சி. பெர்லின் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். தோழர் திருமுருகன் காந்தி அவர்களும், தோழர் அப்துல் சமது அவர்களும் மீனவர்களின் உரிமை மற்றும் வாழ்வாதாரம் குறித்து உரையாற்றினர். இறுதியாக தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010