இயற்கை வேளாண் அறிஞர் ஐயா முனைவர் நம்மாழ்வார் அவர்கள் நினைவுநாள் (30.12.2013)
“மண்ணைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அதுவே இயற்கைத் தாய்க்கு நாம் அளிக்கும் பெரும் விருது”
தமிழகத்தில் நம் சமகாலத்தில் மண்வளம் , நீர்வளம், வேளாண்வளம் ஆகியவற்றை பற்றி விரிவான பார்வையை தனது மறைந்த இயற்கை வேளாண் அறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள் கூறியவை இந்த வரிகள் .
வேதி உரங்களும், பூச்சிக் கொள்ளிகளும் பயன்படுத்தக் கோரி பன்னாட்டு நிறுவனங்களும், இந்நாட்டு அரசும் உழவர்களை நெருக்கும் தருணத்தில் இயற்கை வழியிலான வேளாண்மை முறையை பற்றி விரிவாகக் கூறினார் ஐயா நம்மாழ்வார் அவர்கள். மீத்தேன் திட்டம், மரபணு சோதனைகள், பி.டி. கத்தரிக்காய் போன்றவற்றை எதிர்த்து போராடிய களப்பணியாளர் ஐயா நம்மாழ்வார் அவர்கள். “இயற்கை வழி உழவாண்மை என்பது செலவு குறைந்தது. விபத்து குறைந்தது. சத்து மிகுந்தது. பூரணத்துவம் உள்ளது. அதுவே நிலைத்து நீடிக்க வள்ளதும் ஆகும்” என்று கூறினார்.
அதேநேரம் அறிவியல் பார்வையை புறக்கணித்தவர் அல்ல ஐயா நம்மாழ்வார் அவர்கள். இயற்கை சீற்றங்களை பற்றி குறிப்பிடும் ஒரு இடத்தில் “வெள்ளம் வருவது இயற்கையான செயல். ஆனால் மனிதர்களின் தவறான செயல்பாட்டால் வெள்ளப் பெருக்கின் சேதம் அதிகரிக்கிறது” என்று குறிப்பிட்டார். தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஐயா நம்மாழ்வார் அவர்களை பாராட்டி ‘சுற்றுச் சூழல் சுடரொளி’ என்ற விருதைக் கொடுத்தது.
2013 ம் ஆண்டு பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்ய முற்பட்டத் தருணத்தில் ஐயா நம்மாழ்வார் அவர்கள் இயற்கையோடு கலந்தார்.
தமிழர்தம் வேளாண் வாழ்வியலை பன்நாட்டு நிறுவங்களிடம் இருந்து மீட்டெடுக்க போராடிய இயற்கை வேளாண் அறிஞர் ஐயா முனைவர் நம்மாழ்வார் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் புகழ்வணக்கம் செலுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010