



முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தொடர்பாக அவரின் பெற்றோரை சந்தித்தோம். உடல்நலமற்ற பெற்றோர், இளைய தம்பிகளை கரையேற்றவும், வறுமையிலிருந்து மீளவும் போராடி கல்வி கற்ற மாணவன் மணிக்கண்டன் இறப்பு அக்குடும்பத்தை மீளமுடியாத நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. காவல்துறையின் அத்துமீறும் வன்முறைகள் எளியவர்கள் வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. வரம்பற்ற இந்த வன்முறைகள் கேள்வி எழுப்பப்படவில்லையெனில் இந்த அரச வன்முறை அனைவரின் மீதும் பாயும் நாள் வெகுதொலைவில் இல்லை.
-தோழர் திருமுருகன் காந்தி