அணை பாதுகாப்பு மசோதா: தமிழகத்தை அழிக்கும் பேராபத்து
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
இந்த மசோதாவின் படி இனி மாநிலங்களிலுள்ள அணைகள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும். மாநிலங்கள் இதுவரை அணைகள் குறித்து செய்து வந்த பராமரிப்பு, பாதுகாத்தல், உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் இழந்து, ஒன்றிய அரசு அமைக்கும் ’மத்திய அணைப்பாதுகாப்பு குழு’விற்கு தகவல் சேகரித்து கொடுக்கும் வேலையை மட்டுமே செய்யும் அவலநிலை ஏற்படும். ஏற்கனவே, முல்லைபெரியாறில் உரிமை மறுக்கப்பட்டு தென்மாவட்டங்கள் பஞ்சத்தை எதிர்நோக்கியிருக்கும் சூழலில், இப்போது காவிரி நீர் உரிமையும் மறுக்கப்பட்டால் ஒட்டுமொத்த டெல்டாவும் வறட்சி பஞ்சத்தை சந்திக்கும் சூழல் உருவாகும். ஆக, தமிழ்நாட்டின் 70%க்கும் மேலான நிலப்பரப்பு பாலைவனமாகும் பேராபத்து இச்சட்டத்தின் மூலம் ஏற்படும்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010