



















தமிழ்பெண் பொதுவெளி – நூல் வெளியீட்டு விழா
தமிழீழப் பெண்களின் விடுதலைப் போராட்டம் மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்து ஆய்வாளர் ந.மாலதி அவர்கள் எழுதி, நிமிர் பதிப்பகம் சார்பாக கொண்டுவரப்பட்டுள்ள, “தமிழ்பெண் பொதுவெளி: தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும், வீழ்ச்சியும்” என்ற நூலின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67-வது நாள் (26-11-2021) அன்று, சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெற்றது.
மதிமுக பொதுச்செயலாளர் ஐயா.வைகோ அவர்கள் வெளியிட விசிக தலைவர் தோழர் திருமாவளவன் அவர்கள் நூலினை பெற்றுக்கொண்டார். அவர்களோடு, தவாக தலைவர் தோழர் வேல்முருகன், மதிமுக பொதுச்செயலாளர் தோழர் மல்லை சத்யா, பேராசிரியர் சரஸ்வதி மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
புத்தக தேவைக்கு: +918939782116
இணையவழியில் பெற:https://nimirbooks.com/product/tamilpen-pothuveli/
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் ஐயா வைகோ அவர்கள் ஆற்றிய உரை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை
மே பதினேழு இயக்கம்
9884864010