





























நீட் தேர்வு முறையை ரத்து செய்! – சாஸ்திரி பவன் முற்றுகை
பார்ப்பன-பனியா கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக நலனுக்காக நீட் தேர்வினை நடத்தி தமிழ்நாட்டு மாணவர்களின் மரணத்திற்கு காரணமான மோடி அரசை கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்ட மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற கோரியும், ‘தமிழின விரோத’ பாஜக மோடி அரசை கண்டித்து, இந்திய அரசு அலுவலகமான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் இன்று (20-09-2021) காலை மே பதினேழு இயக்கம் மற்றும் தோழமை அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டது.
முற்றுகையின் போது, நீட் தேர்வின் மூலம் மருத்துவத்தை வணிகமயமாக்குவது, தமிழ்நாட்டு மாணவர்கள் வஞ்சிக்கப்படுவது, தமிழ்நாட்டு மருத்துவ வளத்தை கொள்ளையடிப்பதோடு, மருத்துவ கட்டமைப்பை சிதைப்பது உள்ளிட்ட மோடி அரசின் பல்வேறு தமிழர் விரோத செயல்களை கண்டித்து பெண்கள், குழந்தைகள் என தோழர்கள் அனைவரும் பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் இட்டனர்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட எண்ணற்ற தோழர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவருமான தோழர் தமிமுன் அன்சாரி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர் கே.எம்.சரீப், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் பேரறிவாளன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை மாவட்ட தலைவர் முகமது அன்பன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், தோழர்கள் இந்த முற்றுகையில் பங்கேற்று கைதாகினர்.
தோழர் திருமுருகன் காந்தி ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய பேட்டி.யூடியூப் காணொலி:
மே பதினேழு இயக்கம்
9884864010