



















தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளையொட்டி, இன்று (17-09-2021) காலை சென்னை தியாகராயா நகர் பேருந்து நிலையம் முன்புள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு மே 17 இயக்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. பறையிசையுடன் துவங்கிய நிகழ்வில், தந்தைப் பெரியாரின் சமூகநீதி கருத்துக்கள் முழக்கங்களாக இடப்பட்டன. பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பெரியாரின் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் மற்றும் டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் தீபக் அவர்களும் கலந்துகொண்டனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010