சமூகநீதியின் பாதுகாவலன் தந்தை பெரியார்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
1950 சனவரி 26 அன்று நடப்புக்கு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் வேலை வாய்ப்பில் மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. கல்வியில் இடஒதுக்கீடு இல்லை. திருச்சியில் 1950 டிசம்பர் முதல் தேதியன்று பெரியார் அனைத்துக் கட்சி வகுப்புரிமை ஆதரவாளர்களை திரட்டி கம்யூனல் ஜி.ஓ. மாநாடு நடத்தினார். அந்த கூட்டத்தில், “நீ தெருவுக்கு நாலு பைப் போட்டுக் கொடுத்துடுற; தண்ணீ பிடிச்சுக்க-ன்னு சொன்ன, ஆனா டேங்குக்குத் தண்ணீ விடலயே! எங்காளுங்களுக்கு வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு கொடுத்துட்ட, ஆனா எங்காளு இன்னும் படிக்கவே இல்லையே, பிறகு எப்படி வேலை வாய்ப்புக்குப் போய் நிப்பான்?” என்று அவரது குரல் டெல்லி அரசின் செவிகளுக்கு மட்டுமல்ல கல்வியின் இட ஒதுக்கீட்டு அவசியத்திற்கான குரலாகவும் மக்களிடம் பரவியது.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010