மோடி அரசின் மக்கள் விரோத ஆட்சியை எதிர்த்து சனநாயக வழியில் போராட முயன்ற தோழர்கள் நந்தினி, ஆனந்தன் கைது செய்து சென்னையில் சிறையில் அடைக்கப்பட்டு 10 நாட்களை கடந்து விட்டது. போராட முயன்றவர்களுக்கு எதற்காக சிறை?
போராடும் உரிமை, அரசை கேள்வி எழுப்பும் உரிமையென்பது அடிப்படை உரிமையாக அரசியல்சாசனத்தில் உறுதிசெய்யப்பட்ட பின்னர் சனநாயகவிரோதமாக அரசுகள் நடந்து கொள்கின்றன. ’மக்கள் விரோத’ பாஜகவை எதிர்ப்பவர்களை திமுக சிறையிலடைக்க வேண்டிய அவசியமென்ன?
கொரொனோ அழிவிலிருந்து மக்களை காக்க தவறிய பிரேசில் அதிபர் பொல்சினாரோ மீது விசாரணையை மக்கள் மேற்கொள்ளும் நிலையில் இந்தியாவில் இதேபோல மக்களை காக்க தவறிய மோடி மீது தேசதுரோக வழக்குபதிவு செய்வதில் தவறில்லை. இது சனநாயக கோரிக்கையே. இதை வலியுறுத்தி போராட்டம் நடத்த அனுமதிக்க கோரியதற்காக சிறையிலடைப்பது சனநாயக விரோதம்.
திமுக அரசு உடனே இத்தோழர்களை விடுதலைசெய்து, போராடுவதற்குரிய அனுமதியை வழங்க வேண்டும்.
தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்