கறுப்பு ஜூலை: தமிழர்கள் மீதான சிங்கள இனவெறியின் உச்சம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
1983 மே மாதத்தில் அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்க கூடாது என்று தமிழீழ விடுதலைப்புலிகள் கொடுத்த அழைப்பின் பேரில், தமிழர் பகுதியில் 98 சதவீதம் பேர் தேர்தலை முற்றுமுழுதாக புறக்கணித்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் தமிழர் பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஜெயவர்தனேவை கடுங்கோபம் அடைய செய்தது. இதனால் ஜெயவர்த்தனே தனது படைகளை கட்டவிழ்த்துவிட, தமிழர் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். வீடுகள் எரிக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்த பதட்டம் வவுனியா முழுவதும் பரவியது. பின்பு திரிகோணமலை பகுதிகளிலும் பரவியது. 1983 ஜூலை மாதம் நாள்தோறும் தமிழர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாகி போனது. ஜூலை 23-க்கு மேல் இது உச்சத்தை அடைந்தது.
வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010