






































மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை, இஸ்ரேலின் பெகாசஸ் உளவுச் செயலியின் மூலம் உளவு பார்த்த மோடி அரசை கண்டித்து, மே 17 இயக்கம் சார்பாக, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (24-07-2021) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழமை அமைப்புகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், உளவு பார்த்த மோடி மீது விசாரணை வைக்க கோரியும், மோடி அரசு பதவி விலக கோரியும், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர்.
பங்கேற்பாளர்கள்:
முனைவர் தொல். திருமாவளவன், எம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சி
ஜி.இராமகிருஷ்ணன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தெகலான் பாகவி, எஸ்டிபிஐ
மல்லை சத்யா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
குமரேசன், திராவிடர் கழகம்
கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
ஜெயினுலாபிதீன், மனிதநேய மக்கள் கட்சி
வேணுகோபால், தமிழக வாழ்வுரிமை கட்சி
தபசி குமரன், திராவிடர் விடுதலை கழகம்
சுந்தரமூர்த்தி, தமிழர் விடுதலை கழகம்
தீபக், டிசம்பர் 3 இயக்கம்
குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்
வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை