











ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் விதமாக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு. இராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் தொலைபேசிகளில், பெகாசஸ் என்னும் இஸ்ரேலிய உலவுச் செயலியின் மூலம் ஊடுருவி உளவு பார்த்த மோடி அரசினை கண்டித்து, கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று மாலை 4 மணியளவில், அனைத்துக்கட்சிகள், சமூக இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு. இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி மற்றும் மதிமுக, தமிழ் புலிகள், விசிக , சிபிஎம்(எம்எல்), SDPI உள்ளிட்ட அனைத்து ஜனநாயக முற்போக்கு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், தோழர்களோடு கலந்துகொண்டனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சட்டவிரோதமாக சொந்த நாட்டு மக்களையே உளவு பார்த்த மோடி அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், உளவு பார்த்த மோடியை பதவி விலக கோரியும், உளவுச் செயலியின் மூலம் போலியான ஆதாரங்களை நிறுவி பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் இடப்பட்டன.
மே பதினேழு இயக்கம்
9884864010