



மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசி, பெகாசஸ் என்னும் இஸ்ரேலிய உளவு செயலியின் மூலம் மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டிருக்கக் கூடும் என்ற செய்தி வெளிவந்ததையடுத்து, தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று 19-7-2021 காலை கோவை காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் படிப்பாகத்தில் நடைபெற்றது. அதில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், தான் உட்பட அரசியல் செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோரை மோடி அரசு இந்த உளவு பார்த்ததன் பின்னணியை விரிவாக விளக்கம் அளித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை. கு. ராமகிருஷ்ணன் அவர்களும், திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி அவர்களும் உடனிருந்தனர்.
மே பதினேழு இயக்கம்
988486401