















காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பினை தெரிவித்தும் அதற்கு அனுமதியளிக்கும் பாஜக மோடி அரசை கண்டித்தும் இன்று (17-07-2021) மாலை மே பதினேழு இயக்கத்தின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் காவிரி சமவெளியை அழிக்க முற்படும் ஒன்றிய பாஜக அரசினை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் விட மறுப்பதற்கும், மேகேதாட்டில் அணை கட்ட முயற்சிப்பதற்கும், மோடி அரசு அதனை ஊக்குவித்து துணை போவதற்குமான அரசியல் பின்னணியை பதாகைகள் ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட மே 17 இயக்கத் தோழர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் வழங்கிய பேட்டி.