செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை உடனே இயக்கிடு! – இணையவழி ஆர்ப்பாட்டம்
இந்தியாவின் தடுப்பூசி தேவையை நிவர்த்தி செய்வதற்காக மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் எச்.எல்.எல்.லைப் கேர் என்ற பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்.எல்.எல் பயோடெக் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் செங்கல்பட்டில் அமையப்பெற்ற தடுப்பூசி தயாரிக்கும் தடுப்பூசி வளாகம்.
ஆரம்பத்தில்594 கோடியில் செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டம் காலதாமதம் ஆனதால் 2017இல் 710 கோடியாக 2019இல் 904 கோடியாகவும் அதிகரித்து திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இங்கே உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசி தயாரிப்பதற்கான எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் இந்த தடுப்பூசி நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்து அதன் அடிப்படையில் இந்த தடுப்பூசி நிறுவனத்தை எந்தவித பயன்பாட்டுக்கும் பயன்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
கிட்டத்தட்ட இங்கு பணியாற்றிய 174 பணியாளர்களையும் பணியில் இருந்து வேறு பணிக்கு சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டு அனுப்பி விட்டார்கள்.
இந்த தடுப்பூசி வளாகம் ஒருவேளை செயல்பாட்டிற்கு வந்திருந்தால் ஏழு வகையான தடுப்பூசிகளை இந்த மையத்தில் இதுவரை தயாரித்து உள்நாட்டு தேவைக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருக்க முடியும். ஆனால் அது தற்போது வாய்ப்பில்லாமல் கிடப்பில் கிடக்கிறது.
தற்போதைய கொரோனா சூழலில் அதற்கான தடுப்பூசிகள் தயாரித்து கொடுப்பது மிக சிரமம் நிலவி வருகிற சூழ்நிலையில் இந்த செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் செயல்பாட்டுக்கு வந்தால் தடுப்பூசி தேவைகளுக்கு தென் மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் இங்கிருந்தே தயாரித்து மக்கள் உயிர் ஆயிரக்கணக்கில் காப்பாற்றப்படும்.
பாஜக-மோடி அரசே!
* தமிழகத்திற்கு போதுமானவையை கொடு!
* தமிழர்களுக்கு மட்டுமே வேலைகளை ஒதுக்கு!
* தனியார் லாபத்திற்காக தடுப்பூசியை வணிகமயமாக்காதே!
* தடுப்பூசி மக்களுக்கானது; கார்ப்பரேட்களுக்கான விற்பனை பொருளல்ல!
மே 12 புதன்கிழமை காலை 10 மணிக்கு, வீட்டின் முன் கோரிக்கை பதாகைகளை ஏந்தியும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் இணைய வழி போராட்டத்தில் ஈடுபடுவோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010