


மே பதினேழு இயக்கத்தின் தோழர் நாகராஜ் இன்று (17-04-2021) காலை ஓர் விபத்தில் உயிரிழந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் நாகராஜ், மே 17 இயக்கத்தின் அனைத்து போராட்டங்களிலும் குழந்தையுடன் பங்கேற்பார். சிறந்த களப்பணியாளர். கொரானா பரவத் துவங்கிய காலத்தில், கேகே நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று கபசுரக்குடிநீர் வழங்கி பெரு மதிப்பை பெற்றவர்.
தோழர் நாகராஜ் மரணம் மே 17 இயக்கத்திற்கு மாபெரும் இழப்பாகும். அவரது மரணத்திற்கு மே பதினேழு இயக்கம் அஞ்சலி செலுத்துகிறது. தோழரை இழந்து வாடும் குடும்பத்திற்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்திற்கு மே 17 இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதை கூறிக்கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884072010