இந்திய ஜனத்தொகையில் முக்கால்வாசிக்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய ஒளி விளக்கு அணைந்தது. அய்யா ஆனைமுத்து மறைந்தார்.
மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு கொண்ட சனாதானத்தை இந்திய சமூக நிலபரப்பில் விதைக்க நினைத்த சக்திகளை எதிர்த்து ஒரு புரட்சியை செய்திட்ட திராவிட இயக்கத்தின் மூலவரான தந்தை பெரியாரை தலைமை ஏற்று களத்திற்கு வந்த களப்போராளி அய்யா ஆனைமுத்து.
எத்தனையோ போராட்டங்கள் எத்தனையோ இன்னல்கள் போராட்டத்தை தனது வாழ்க்கையாக வறிந்துகட்டிக்கொண்ட மாமனிதர். பெரியாரின் எழுத்துக்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அயராது பாடுபட்டவர். இது அனைத்தையும் தாண்டி தமிழகத்தில் பரவி இருந்த சமூக நீதி அரசியலின் அவசியத்தை இந்தியா முழுக்க புரிய வைத்ததில் அய்யா ஆனைமுத்து அவர்களும் அவரின் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சியின் பணியும் மறுக்கமுடியாதது.
ஐயா அவர்களின் இந்த பணிதான் மண்டல் கமிஷனின் பரிந்துரையை வி.பி.சிங்கை ஏற்க வைத்தது. சட்டமியற்றிய விபி சிங்கிற்கு எதிராக நடந்த அனைத்து கொடுமைகளையும் தடுக்க வைத்தது. இதன் விளைவாக இந்திய நிலப்பரப்பில் வாழும் முக்கால்வாசி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்விலும் ஒளி ஏறியது.
தனது இறுதிக்காலம் வரை தமிழ் தமிழர் தமிழர் நலம் என்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த ஐயா வே ஆனைமுத்து மறைந்தார் என்பது தமிழ்ச் சமூகத்திற்கும், திராவிட சித்தாந்தத்திற்கும் பேரிழப்பாகும். மறைந்த ஐயா ஆனைமுத்து அவர்களின் கனவை இளம் தோள்களில் சுமப்போம். தமிழர்களின் சுயமரியாதையை வென்றெடுப்போம்.
ஐயாவிற்கு மே 17 இயக்கத்தின் செம்மார்ந்த வீரவணக்கம்.
மே17 இயக்கம்
9884072010