மே பதினேழு இயக்கம் சார்பாக, சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்து சென்னையில் தொடர் பரப்புரையை நடைபெற்று வருகிறது. தொடர் பரப்புரையின் 3ம் நாளான 24-02-2021 அன்று , ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததை இந்த தொடர் பிரச்சாரத்தின் மூலம் கண்டறிந்துள்ளனர். பாஜகவின் மோடி அரசினால் சமூகநீதிக்கான தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டு, உயர் சாதி பார்ப்பனர்கள் பயன்பெறும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்படுவதை மக்களால் புரிந்துகொள்ள முடிவதை காண முடிந்தது.
மே பதினேழு இயக்கம்
9884072010