
மூத்த பொதுவுடமை சித்தாந்தவாதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் தா.பாண்டியன் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக இன்று (26-02-2021) உயிரிழந்தார். சிறந்த களப்போராட்ட போராளியான தா.பா. அவர்கள், தோழர் ஜீவா உடன் இணைந்து பொதுவுடமை சித்தாந்தத்தை மக்களிடையே கொண்டு சென்றார். சிறந்த ஆளுமை பண்பு கொண்ட இவர், பல்வேறு சனநாயக போராட்டங்களில் முன்னனி வகித்தவர். தமிழ் மொழியின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். தமிழீழ விடுதலைக் கோரிக்கையை ஆதரித்தவர், பாசிச இந்துத்துவவாதிகளை இறுதிமூச்சுவரை எதிர்த்த ஐயா தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு மே 17 இயக்கத்தின் செவ்வணக்கம்.
மே பதினேழு இயக்கம்
9884072010