
தமிழீழ விடுதலைக்காக ஐநா அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிர்நீத்த வீரத்தமிழ்மகன் முருகதாசனுக்கு12ம் ஆண்டு வீரவணக்கம்- மே 17 இயக்கம்
2009-இல் ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் இலங்கை, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட பொழுது சர்வதேச சமூகம் கள்ள மவுனம் காத்தது. சர்வதேச சமூகத்தின் இந்த கள்ள மௌனத்தை அம்பலப்படுத்த ஐநா அலுவலகம் முன்பு மாவீரன் முத்துக்குமார் வழியில் தீக்குளித்து தன்னுயிரை ஈகம் செய்தார் முருகதாசன்.
இன்றும் இனப்படுகொலை இலங்கை அரசால் ஈழத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் பொழுதும் சர்வதேசம் அதே கள்ள மௌனத்தோடுத் தான் இருக்கிறது.