


உழவர் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி உழவர்கள் டில்லியை முற்றுகையிட்டு போராடி வருவதை கண்டு மனமுடைந்த சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர், போராடும் உழவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக 09-01-21 அன்று தன்னுயிர் ஈந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று (10-01-21) நடைபெற்ற அவரது இறுதி நிகழ்விற்கு, மே பதினேழு இயக்கத் தோழர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.