



கூடங்குளம், காவிரி, மீத்தேன், ஜல்லிக்கட்டு, எட்டு வழிச்சாலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு சூழலியல் சார்ந்த, உரிமை சார்ந்த, வாழ்வாதார பிரச்சனை போராட்டங்களில் பங்கெடுத்த அரசியல் கட்சி/இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள், தோழர்கள், பங்கேற்பாளர்கள், பொதுமக்கள் மீது அதிமுக அரசினால் போடப்பட்டுள்ள பொய்யான, புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்யவும், UAPA உள்ளிட்ட அடக்குமுறை சட்டங்களை ரத்து செய்யவும், அனைத்து முற்போக்கு சக்திகளும் இணைந்த முன்னெடுப்பிற்கான ஆலோசனை கூட்டமும், தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும், 09-01-2021 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் (Chennai Reporters Guild) வைத்து நடைபெற்றது. அதனடிப்படையில், வரும் பிப்ரவரி 13ம் நாள் சென்னையில் மாபெரும் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்றார்.