



மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக சென்னை சேப்பாக்கத்தில் இன்று (சனவரி 6) காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து பங்கேற்பது என்று முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையில், மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.