




பாஜக அரசின் உழவர் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், டில்லியில் போராடி வரும் உழவர்களுக்கு ஆதரவாகவும், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பாக, 04-01-2021 அன்று, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் அரங்க.குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது.