பண்பாட்டு ஆய்வாளர், மானுடவியலாளர், திராவிட-தமிழ்த்தேசிய பேராளுமை பேரா.தொ.பரமசிவன் அவர்கள் நேற்று (24-12-2020) மறைந்ததையடுத்து, அவரது இறுதி நிகழ்வு பாளையங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த இறுதி நிகழ்வில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் புருசோத்தமன் மற்றும் தோழர் பிரவீன் குமார் உட்பட மே 17 இயக்கத் தோழர்கள் முழக்கங்கள் இட்டவாறு அணிவகுத்து சென்று, பேரா.தொ.ப. அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஐயா தொ.ப. அவர்களுடனான நினைவை பகிர்ந்ததோடு, குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.
பின்னர் ஊடகவியலாளர்களுக்கு நேர்காணல் அளிக்கையில், பேரா. தொ.ப. அவர்களுக்கு தமிழ்நாடு அரசு, அரசு மரியாதை செலுத்த வேண்டுமெனவும், பேரா. தொ.ப. அவர்களின் எழுத்துக்களை நாட்டுடமையாக்க வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் சார்பாக கோரிக்கைகளை முன்வைத்தார்.
மே பதினேழு இயக்கம்
9884072010