









தந்தை பெரியாரின் 47-வது நினைவு நாளான இன்று (24-12-2020), அவரை நினைவுகூரும் விதமாக மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் புருசோத்தமன் மற்றும் தோழர் பிரவீன் குமார் ஆகியோர் தலைமையில், குழந்தைகள் பெண்கள் என பறையிசைத்துக் கொண்டும் முழக்கங்கள் இட்டவாறும் அணிவகுத்து வந்த தோழர்கள் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.