காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள மேக்னா ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 85 நாட்களாக 55க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நடத்தி வருகின்ற தொழிலாளர் வேலைநிறுத்த கோரிக்கையின் மீது விரைந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள மேக்னா ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 85 நாட்களாக 55க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நடத்தி வருகின்ற தொழிலாளர் வேலைநிறுத்த கோரிக்கையின் மீது விரைந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- மே 17 இயக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் செயல்பட்டு வருகிற கனடா நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் தான் மேக்னா ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனத்தில் பணிபுரிகிற நிரந்தர தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வுக்கான புதிய ஒப்பந்தத்தில் விரைவாக நிர்வாகம் முடிவுக்கு வரவேண்டும் என எண்ணி, தொழிலாளர்கள் சார்பாக எல் டி யு சி உழைப்போர் உரிமை இயக்கம் என்ற தொழிலாளர் சங்கத்தில் இணைய முடிவெடுத்திருக்கிறார்கள்.

இதனை விரும்பாத நிர்வாகம் பழிவாங்கல் நடவடிக்கையாக சில்லறை காரணங்களைச் சொல்லி தொழிற்சங்க முன்னணி தொழிலாளர்கள் ஆறு பேரை முதலில் பணியிடைநீக்கம் செய்திருக்கிறது. இதோடு மேலும் 12 தொழிலாளர்களை 31.08.2020 தேதியிட்ட உத்தரவின் மூலம் மகாராஷ்டிர மாநிலம் புனேவிற்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.

நிர்வாகத்தின் இந்த பழிவாங்கல் நடவடிக்கையை கைவிட வேண்டும் பணி இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து சம்பள உயர்வு ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க சட்டப்படி முன் அறிவிப்பு தந்து 17 9 2020 முதல் நிர்வாகத்தில் வேலை செய்கிற சுமார் 75 நிரந்தர தொழிலாளர்களில் 70 சதவீதத்திற்கும் மேலான 54 தொழிலாளர்கள் தொடர்ந்து 85 நாட்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இவர்களை நேற்று 12 12 2020 அன்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் தலைமையில் மே 17 இயக்க தோழர்கள் சந்தித்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தோம்.

மேலும் தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தத்தால் தொழிலாளர்களும் அவர்களை சார்ந்த குடும்பங்களும் கடந்த மூன்று மாதங்களாக மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் மேக்னா ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இதுகுறித்து தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. ஆகவே அரசு இதில் உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களின் சங்கம் வைக்கும் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, நிர்வாகத்தின் பழிவாங்கல் நடவடிக்கையை ரத்து செய்து, பெருவாரியான தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கத்தின் வழியாக அவர்களுடன் ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும் என்று மே 17 இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply