புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மதவெறி, சாதிவெறிக்கு எதிராக மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு கூட்டம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக 06-12-2020 அன்று நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற கூட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.



