புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64வது நினைவு நாளான இன்று (06-12-2020), மே பதினேழு இயக்கம் சார்பாக கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகில் இருக்கும் அண்ணலில் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பறையிசை முழங்க, எழுச்சி முழக்கமிட்டவாரு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட தோழர்கள் அனைவரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.










